×

நல்லம்பலில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம் குறித்த பயிற்சி

 

காரைக்கால்,பிப்.7: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு நல்லம்மல் கிராமத்தில் காரைக்கால் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் கால்நடை வளர்ப்பில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் மலட்டுத்தன்மை மேலாண்மை குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்கமானது நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியில் கூடுதல் வேளாண் இயக்குநர் மற்றும் ஆத்மா திட்ட இயக்குனர் கணேசன் தலைமை தாங்கி இப்பயிற்சியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை குறித்து விளக்கினார்.அதனை தொடர்ந்து கால்நடை துறை இணை இயக்குனர் கோபிநாத் கால்நடை வளர்ப்பில் கையாள வேண்டிய வழிமுறைகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் கோட்டுச்சேரி கால்நடை உதவி மருத்துவர் டாக்டர். கிருத்திகா கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை மற்றும் மலட்டுத்தன்மை பராமரிப்பில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்தும், மற்றும் தென்னங்குடி உதவி கால்நடை மருத்துவர் செந்தில்நாதன் கால்நடை வளர்ப்பில் முக்கிய நிர்வாக அம்சங்கள், நோய் மேலாண்மை குறித்தும் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு பயனடைந்தனர். பின்னர் குடல் புழுக்களை அகற்றுவதற்கான மருத்தும்,கல்லீரல் ஆரோக்கியத்திற்கு டானிக் மற்றும் மலட்டுத்தன்மை கட்டுப்படுத்துவதற்காக தாது உப்பு கலவை ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

The post நல்லம்பலில் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம் குறித்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Nallambhal ,Karaikal ,Agriculture Technology Management Agency ,Karaikal Agriculture and Farmers Welfare Department ,Tirunallaru Nallammal ,Nallambal ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...